வாயில்


தாயின்

கருவறை  வாயிற் கதவு

திறந்தது...

மனிதப்   பயணம்

மண்மீது

வந்தது...



எந்த

வாயிற் கதவு

திறந்தால்

எங்கள்

வறுமை  தொலைந்து

வந்து  சேரும்

வளமான   வாழ்வு ?

2 கருத்துகள்:

ஈரோடு கதிர் சொன்னது…

தொடக்கம் நன்று

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

தமிழ்க்கூற்று சொன்னது…

பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளை என்போம்; முதலி யென்போம்; நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள்; நமைத்“தமிழர்“ என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள் தமிழ்நாட்டாரே!

என்றைக்கு மனிதனை மனிதன் மதிக்கின்றானோ
என்றைக்கு சாதி, சமய, மத வேறுபாடுகள் தொலையுமோ
என்றைக்கு ஏற்றத் தாழ்வற்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமையுமோ

அன்று தான் தீர்வு


”வாட்டுகின்ற வறுமைக்கும் எந்தமிழர் அடிமையாய்
வாடுதற்கும், நீட்டுகின்ற வெடிகுழல்தான் - தமிழகத்தில்
நிகழ்த்தும் என்றால் காட்டுங்கள் தமிழ்மறத்தை!”